உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

நொய்யல் கரை மேம்படுத்தும் பணிகள் தீவிரம்

Published On 2022-12-09 07:25 GMT   |   Update On 2022-12-09 07:25 GMT
  • பஸ் நிலையம் புனரமைக்கும் பணி காரணமாக யுனிவர்சல் தியேட்டர் சந்திப்பு பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் இயங்கியது.
  • நொய்யல் ஆற்றின் கரையில் கான்கிரீட் சாய்தளம், சாலையை ஒட்டி மழை நீர் வடிகால் ஆகியன அமைக்கும் வகையில் பணிகள் தொடங்கி உள்ளன.

திருப்பூர் : 

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நொய்யல் கரை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நொய்யல் ஆற்றில், அணைமேடு பகுதியில் இருந்து மணியகாரம்பாளையம் சாலை பாலம் வரையில் ஆற்றின் இரு கரைகளும் மேம்படுத்தி பொழுது போக்கு அம்சங்கள் அமைக்கும் வகையில் பணி திட்டமிட்டு நடைபெற்று வருகிறது.

இதில் வடபுறக்கரையில் அணைக்காடு முதல் ஈஸ்வரன் கோவில் பாலம் வரையில் கான்கிரீட் சாய் தளம் அமைத்தல், மழை நீர் வடிகால் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் பாலத்தின் மேற்குப்பகுதியில் இப்பணி தாமதமாக துவங்கியது. பஸ் நிலையம் புனரமைக்கும் பணி காரணமாக யுனிவர்சல் தியேட்டர் சந்திப்பு பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் இயங்கியது. இதனால் கரையோரம் பணிகள் செய்ய முடியாமல் இருந்தது.

தற்போது மத்திய பஸ் நிலையம் கட்டுமானப் பணி முடிந்து திறக்கப்பட்டதையடுத்து தற்காலிக பஸ் நிலையம் அண்மையில் மூடப்பட்டு பஸ்கள் இடமாற்றப்பட்டன.தற்போது கரை மேம்பாடு செய்யும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. நொய்யல் ஆற்றின் கரையில் கான்கிரீட் சாய்தளம், சாலையை ஒட்டி மழை நீர் வடிகால் ஆகியன அமைக்கும் வகையில் பணிகள் தொடங்கி உள்ளன.

Tags:    

Similar News