கோப்புபடம்
மின்சாரம் பாய்ந்து வடமாநில வாலிபர் பலி
- ஸ்டீல் டேப்பை இழுத்து விட்டு விளையாடி கொண்டிருந்ததாக தெரிகிறது.
- மேல்புறம் செல்லும் மின் கம்பியில் ஸ்டீல் டேப் பட்டு மின்சாரம் அவர்மேல் பாய்ந்துள்ளது.
ஊத்துக்குளி:
திருப்பூர் அருகேயுள்ள உள்ள முதலிபாளையம் அங்காள பரமேஸ்வரி நகரில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிகாஷ் கவுடா (வயது 17) என்பவர் தனது குடும்பத்துடன் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று பிகாஷ் கவுடா கட்டிடத்தில் உள்ள ஜன்னல் பக்கத்தில் அருகே விட்டத்தில் கட்டிட வேலைக்கு பயன்படுத்தும் ஸ்டீல் டேப்பை இழுத்து விட்டு விளையாடி கொண்டிருந்ததாக தெரிகிறது.
அப்போது வீட்டிற்கு வெளியே மேல்புறம் செல்லும் மின் கம்பியில் ஸ்டீல் டேப் பட்டு மின்சாரம் அவர்மேல் பாய்ந்துள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து மீட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர் . பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.