உள்ளூர் செய்திகள்
விபத்துக்குள்ளானவர்களை படத்தில் காணலாம். 

பல்லடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 பேர் பலி

Published On 2022-10-06 07:41 GMT   |   Update On 2022-10-06 07:49 GMT
  • விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.
  • விபத்தில் சோமசுந்தரம் மற்றும் சக்திவேல் ஆகியோர் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்த ராயப்ப செட்டியார் என்பவரது மகன் சோமசுந்தரம் (வயது 70 ). அதே ஊரைச் சேர்ந்த சவுண்டப்பன் என்பவரது மகன் சக்திவேல் ( 40 ). இவர்கள் இருவரும் நேற்று கணபதிபாளையத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பல்லடம் -உடுமலை ரோட்டில் உள்ள வாவி பாளையம் கருப்பராயன் கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக மின்கம்பத்தை ஏற்றுக் கொண்டு ஜேசிபி வாகனம் ஒன்று வந்துள்ளது. இதனை எதிர்பாராத இவர்களது மோட்டார் சைக்கிள் மின் கம்பம் கொண்டு சென்ற வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சோமசுந்தரம் மற்றும் சக்திவேல் ஆகியோர் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News