உள்ளூர் செய்திகள்
கோப்புபடம். 

தொடர் மழையால் கிணறுகளின் நீர்மட்டம் உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2022-10-17 07:37 GMT   |   Update On 2022-10-17 07:37 GMT
  • அடுத்தடுத்த மாதங்களில் விவசாய பணிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
  • அடுத்தடுத்த மாதங்களில் விவசாய பணிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

காங்கயம்:

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதிகளில் மழைப்பொழிவானது கடந்த 15 ஆண்டுகளாகவே படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் விவசாய கிணறுகள், போர்வெல்களின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. 30 அடி கிணற்றில் விவசாயம் செய்ய போதுமான தண்ணீர் ஊற்றெடுத்த நிலை மாறி 100 அடி கிணறு வெட்டினாலும் போதிய தண்ணீர் கிடைக்காத நிலை உருவாகி இருந்தது.

200 அல்லது 300 அடி போர்வெல்லில் கிடைத்து வந்த தண்ணீர் இன்று ஆயிரத்து 500 அடியில் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இதற்கு முக்கிய காரணமாக மழைப்பொழிவு குறைவு என கருதப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் காங்கயம் பகுதியில் கீழ்பவானி பாசனம் பெறும் பகுதிகள் மற்றும் பி.ஏ.பி. பாசன பகுதிகளிலும் ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் விவசாயிகளின் கிணறுகளில் நீர்மட்டம் படிப்படியாக உயரத்தொடங்கியுள்ளது. மேலும் தற்போது காங்கயம் பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகளில் தற்போது கிணறுகளின் மேல் திட்டு வரை தண்ணீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் அடுத்தடுத்த மாதங்களில் விவசாய பணிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News