உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

திருப்பூர் மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Published On 2022-10-29 07:25 GMT   |   Update On 2022-10-29 07:25 GMT
  • திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் 2வது குடிநீா்த் திட்டத்தின்கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
  • இரண்டாவது குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

திருப்பூர்:

திருப்பூா் மாநகரில் 2-வது குடிநீா்த் திட்டத்தின்கீழ் விநியோகிக்கப்படும் குடிநீா் விநியோகம் நாளை 30-ந்தேதி நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் 2வது குடிநீா்த் திட்டத்தின்கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2வது குடிநீா்த் திட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரதான குழாயில் மின்சார வாரியத்தின் மூலம் சனிக்கிழமை மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் இரண்டாவது குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உள்பட்ட வாா்டு எண் 1, 13, 14, 3வது மண்டலத்துக்கு உள்பட்ட 44, 45, 50, 51, மற்றும் 4வது மண்டலத்துக்கு உள்பட்ட 52, 55 ஆகிய வாா்டுகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அதே வேளையில், வரும் திங்கள்கிழமைமுதல் மேற்கண்ட பகுதிகளில் தங்கு தடையின்றி குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News