உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

மூச்சுத்திணறலை தடுக்க கால்நடைகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டுகோள்

Published On 2023-11-25 11:02 GMT   |   Update On 2023-11-25 11:02 GMT
  • குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும்.
  • சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.

திருப்பூர்:

திருப்பூரில் குறிப்பாக வடக்கு பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாலை, மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் மற்றும் கோவை காலநிலை ஆராய்ச்சி மைய அறிக்கைப்படி, இந்த வாரம் திருப்பூரில், வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். அதிகபட்சம் 31 டிகிரி, குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும். காலை நேர காற்றின் ஈரப்பதம், 100 சதவீதம், மாலை நேரம், 92 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.வரும் நாட்களில் மழை எதிர்பார்க்கப்படுவதால் போதியளவு வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். விவசாய நிலங்களில் நீர்பாசனம் மற்றும் மருந்து தெளிக்கும் பணியில் கவனம் செலுத்த வேண்டும். மழைக்காலமாக இருப்பதால், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இந்த வெப்ப நிலையில் கால்நடைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளதால் போதிய கதகதப்பு ஏற்படுத்துவதுடன் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News