உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

திருப்பூர் மாவட்டத்தில் 10 தாசில்தார்கள் அதிரடி இடமாற்றம் - கலெக்டர் வினீத் உத்தரவு

Published On 2023-03-05 11:53 IST   |   Update On 2023-03-05 11:53:00 IST
  • கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) முத்துராமன், திருப்பூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அவிநாசி தாசில்தார் ராஜேஷ், திருப்பூர் கலெக்டர் அலுவலக மேலாளராக (குற்றவியல்) நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் நிர்வாக வசதிக்காக, திருப்பூர் மாவட்டத்தில், 10 தாசில்தார்கள் இடமாறுதல் மற்றும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அவிநாசி தாசில்தார் ராஜேஷ், திருப்பூர் கலெக்டர் அலுவலக மேலாளராக (குற்றவியல்) நியமிக்கப்பட்டுள்ளார்.

கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) முத்துராமன், திருப்பூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கலெக்டர் அலுவலக குற்றவியல் மேலாளர் மகேஸ்வரன், ஹிந்து சமய அறநிலையத்துறை தனி தாசில்தார்; அங்கிருந்த கனகராஜ், கலெக்டர் அலுவலக மேலாளராக (பொது) நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News