உள்ளூர் செய்திகள்

சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்ற காட்சி. 

வெள்ளகோவிலில் சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2023-10-20 18:21 IST   |   Update On 2023-10-20 18:22:00 IST
  • வளர் இளம் பருவத்தினருக்கு டெங்கு விழிப்புணர்வு, புகையிலை விழிப்புணர்வு மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
  • நல கல்வியாளர் பிரவீன் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டி. ராஜலட்சுமி தலைமையில் வளர் இளம் பருவத்தினருக்கு டெங்கு விழிப்புணர்வு, புகையிலை விழிப்புணர்வு மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் ரத்த அழுத்தம், உயரம், எடை ஆகியன பரிசோதனை செய்யப்பட்டு, 96 மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கதிரவன், நல கல்வியாளர் பிரவீன் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News