உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.
தபால் மூலம் பழனி கோவில் பஞ்சாமிர்தம்
- முருகன் புகைப்படம், திருநீறு வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும் என தபால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பழனி கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற பிப்ரவரி 5ந் தேதி நடக்கிறது.
உடுமலை:
பழனி கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற பிப்ரவரி 5ந் தேதி நடக்கிறது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிகளவு வருவது வழக்கம். இந்து சமய அறநிலையத்துறை தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் வீட்டிலிருந்த படியே பிரசாதங்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தது.
அதன்படி மாவட்டங்களில் உள்ள தபால் நிலையங்களில் பழநி பஞ்சாமிர்தம் பெறுவதற்கான விண்ணப்பங்களில் முகவரியை பூர்த்தி செய்து 250 ரூபாய் செலுத்த வேண்டும். விரைவு அஞ்சல் சேவை வாயிலாக அரை கிலோ பஞ்சாமிர்தம், முருகன் புகைப்படம், திருநீறு வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும் என தபால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.