உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

ஆடி மாதத்தையொட்டி உடுமலை கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2022-07-19 11:20 IST   |   Update On 2022-07-19 11:20:00 IST
  • ஆடி மாத பிறப்பை சிறப்பு வழிபாட்டுடன் மக்கள் வரவேற்றனர்.
  • வனதுர்க்கையம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

உடுமலை:

மங்களகரமான புண்ணிய மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தையொட்டி உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது

அம்மனுக்கு விரதமிருந்து, ஆடிவெள்ளி, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த நாட்களில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வகையில் ஆடி செவ்வாய்க்கிழமையான இன்று உடுமலை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இதே போல் குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் ஆடிப்பூரத்துக்கான சிறப்பு பூஜைகள் தொடங்கியது. திருப்பாவை, திருவெண்பாவை வாசகங்களை உள்ளடக்கிய பட்டு உடுத்தி, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் ஆடி மாத பிறப்பை சிறப்பு வழிபாட்டுடன் மக்கள் வரவேற்றனர்.

உடுமலை அமராவதி நகர் சித்தி விநாயகர் கோவிலில் ஆடி மகா சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த, சித்தி விநாயகர், மூஷிக வாகனம், ஸ்ரீ சதாசிவ லிங்கேஸ்வரர், வனதுர்க்கையம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News