உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

பொங்கலையொட்டி மொச்சை சாகுபடி அறுவடை பணிகள் தீவிரம்

Published On 2023-01-08 06:07 GMT   |   Update On 2023-01-08 06:07 GMT
  • விளைச்சல் குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளை விவசாயிகள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.
  • விதைப்பின் போது இருக்கும் விலை, அறுவடையின் போது பல மடங்கு குறைந்து விடுகிறது.

 உடுமலை:

உடுமலை அருகே ஜல்லிபட்டி, மானுப்பட்டி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில் பருவமழையை அடிப்படையாக கொண்டு மானாவாரி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.குறிப்பாக வடகிழக்கு பருவமழை சீசனில் மொச்சை பல ஆயிரம் ஏக்கரில் விதைப்பு செய்யப்படுகிறது. மேலும் வனப்பகுதியிலுள்ள ஈசல் திட்டு உள்ளிட்ட மலைவாழ் கிராமங்களில் இச்சாகுபடி பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது.

பொங்கல் சீசனை இலக்காக வைத்து இச்சாகுபடியை பாரம்பரியமாக மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் விளையும் மொச்சைக்கு சந்தைகளில் தனி கிராக்கி உள்ளது.ஆனால் அறுவடைக்கு தயாராகும் சாகுபடியில் காட்டுப்பன்றிகளால் சேதம், விளைச்சல் குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளை விவசாயிகள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். மேலும் விதைப்பின் போது இருக்கும் விலை, அறுவடையின் போது பல மடங்கு குறைந்து விடுகிறது. இருப்பு வைத்து விற்பனை செய்யவும் போதிய வசதிகள் இல்லாததால் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

மொச்சை சாகுபடிக்கு உழவு, மருந்து, களை எடுத்தல் என ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவாகிறது. சீதோஷ்ண நிலை ஒத்துப்போனால் ஏக்கருக்கு 600 கிலோ வரை விளைச்சல் இருக்கும். அறுவடையின் போது விலை சரிவை தடுக்க ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் வாயிலாக மொச்சையை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.  

Tags:    

Similar News