உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

நிப்ட்-டீ கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் தொடக்க விழா

Update: 2022-09-29 07:44 GMT
  • இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுவதோடு ஆடை தயாரிப்பு துறையில் வேலை வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.
  • நிப்ட்-டீ திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் தொடக்க விழா நிப்ட்-டீ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

திருப்பூர்:

திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரியின் திறன் மேம்பாட்டு துறை சார்ந்த கிராஸ்- பெக்கர்ட் மற்றும் நிப்ட்-டீ திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் தொடக்க விழா நிப்ட்-டீ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் கிராஸ்-பெக்கர்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்டீபன் லேசர் மற்றும் பிரதிநிதிகள் ஹர்விந்தர் சிங், ஷஷி கன்வால் மற்றும் நிப்ட்-டீ கல்லூரியின் தலைமை வழிகாட்டி ராஜா சண்முகம், தலைவர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த பயிற்சி மையத்தின் மூலம் கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ மாணவிகளுக்கு ஆடை உற்பத்தி துறையில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுவதோடு ஆடை தயாரிப்பு துறையில் வேலை வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.

Tags:    

Similar News