உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம். 

பல்லடம் அருகே சரக்கு வேனில் 2 டன் புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது

Published On 2022-11-12 08:00 GMT   |   Update On 2022-11-12 08:00 GMT
  • கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
  • பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் தனிப்படையினர் காரணம்பேட்டை பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

பல்லடம்:

பல்லடம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்திக் செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் தனிப்படையினர் காரணம்பேட்டை பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சரக்கு வேனில் சட்டவிரோத விற்பனைக்காக புகையிலைப் பொருட்கள் எடுத்து வந்த 3 நபர்களை பிடித்து போலீசார் விசாரித்ததில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் விற்பனை செய்வதற்காக கர்நாடகா மாநிலம் பெங்களூரிலிருந்து புகையிலைப் பொருட்களை வாங்கி வந்ததாகவும் அதனை தனித்தனி குடோன்களில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் கோடங்கிபாளையம் பகுதியில் வேனில் வைத்திருந்த புகையிலைப் பொருட்கள் மற்றும் பாப்பம்பட்டி, பெரியகுயிலி மற்றும் சுல்தான்பேட்டை ஒன்றியம் பூசாரிபாளையம் ஆகிய பகுதிகளில் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருட்கள் மற்றும் 5 வேன்களை கைப்பற்றினர்.இதில் சம்பந்தப்பட்ட பல்லடம் மாணிக்காபுரம் கோல்டன் சிட்டி சுயம்புலிங்கம் மகன் அரவிந்த்ராஜ்(25) , கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் ஜான்சன் மகன் ஜான் சஜு(30), திருச்சி மாவட்டம் மணப்பாறை கோவில்பட்டியை சேர்ந்த மணி மகன் கவின்(24) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 2109 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News