உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

காங்கயம் அருகே பெண்ணிடம் நகைபறிப்பு

Published On 2022-12-24 13:23 IST   |   Update On 2022-12-24 13:23:00 IST
  • காங்கயம் அருகே சடையபாளையம்-தாளக்கரை செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
  • ஊதியூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காங்கயம்:

காங்கயம் அருகே காடையூா் கிராமம், தாளக்கரை பகுதியைச் சோ்ந்தவா் நித்யா (வயது 25). தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா். இவா், காங்கயம் அருகே சடையபாளையம்-தாளக்கரை செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது நித்யாவை பின் தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் 2 நபா்கள் வந்துள்ளனா். சடையபாளையம், புளியங்காட்டு தோட்டம் அருகே வந்தபோது அந்த 2 நபா்களும் திடீரென நித்யா வாகனத்தை வழிமறித்து அவரை கீழே தள்ளிவிட்டு அவா் அணிந்திருந்த 4 1/2 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனா்.இது குறித்து ஊதியூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். 

Tags:    

Similar News