உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

செல்போன் பயன்பாட்டை தவிர்ப்பது நல்லது - மாணவிகளுக்கு போலீஸ் அதிகாரி அறிவுறுத்தல்

Published On 2022-11-06 04:59 GMT   |   Update On 2022-11-06 04:59 GMT
  • படிப்பில் மட்டுமல்லாது ஒழுக்கத்திலும் மேன்மையானவர்களாய் திகழ வேண்டும். சிந்தனைகள் சிதறும் போதே ஒழுங்கீனம் மேலோங்குகிறது.
  • பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மாணவிகள் ஈடுபட்டனர்.

திருப்பூர்:

திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது. பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மாணவிகள் ஈடுபட்டனர்.

முகாம் நிறைவு நாளன்று கொங்கு நகர் சரக உதவி ஆணையர் அனில்குமார் பேசியதாவது: -

ஆசியாவில் அதிக எண்ணிக்கையிலான மாணவிகள் படிக்கும் முதன்மை பள்ளியில் நீங்கள் படிக்கிறீர்கள் என்பதே பெருமைப்பட வேண்டிய விஷயம். படிப்பில் மட்டுமல்லாது ஒழுக்கத்திலும் மேன்மையானவர்களாய் திகழ வேண்டும். சிந்தனைகள் சிதறும் போதே ஒழுங்கீனம் மேலோங்குகிறது.

இதற்கு முக்கிய கருவியாக இருக்கும் மொபைல் போன் பயன்பாட்டை தவிர்த்தல் நல்லது. தேவையறிந்து பயன்படுத்துவது நல்லது. பாதுகாப்பு மிக அவசியம். இடர்பான சூழ்நிலையிலும் தைரியமாக இருக்க வேண்டும். எங்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News