உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

அங்கன்வாடிகளில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published On 2022-07-03 08:37 GMT   |   Update On 2022-07-03 08:37 GMT
  • 11 பாடத்திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.
  • குழந்தைகள் படிப்புடன் நடைமுறை வாழ்க்கையை தெரிந்து கொள்வர்.

உடுமலை:

அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள், பள்ளிக்குச்செல்லும் வகையில்மனதளவில் தயார் படுத்துவதற்காக, முன்பருவக்கல்வி அளிக்கப்படுகிறது. இதன் வாயிலாக 2 முதல்,5 வயது வரை உள்ள குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.குறிப்பாக, உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட அங்கன்வாடி மையங்களில் வழக்கம்போல ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் பாடத்தை முழுமையாக கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி 11 பாடத்திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.அதன் ஒரு பகுதியாக, அங்கன்வாடிகளில் வாழ்க்கையில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வு மற்றும் காணும் காட்சிகளையும் விரிவாக அறிய செயல்முறை கருவிகளுடன் கல்வி கற்பிக்கப்படுகிறது.பள்ளிப்பருவத்துக்கு முன்பே, கல்வியில் நல்ல வளர்ச்சியை பெற வேண்டும் என்பதற்காக பெற்றோரும் ஆர்வம் கொள்கின்றனர்.தங்களது குழந்தைகள் படிப்புடன் நடைமுறை வாழ்க்கையை தெரிந்து கொள்வர் என்பதால் அங்கன்வாடிகளுக்கு குழந்தைகளை அழைத்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News