உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

திருப்பூர் மாநகராட்சியில் வரிகளை செலுத்த சிறப்பு முகாம் - 17-ந்தேதி நடக்கிறது

Published On 2022-11-15 13:00 IST   |   Update On 2022-11-15 13:00:00 IST
  • திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகள் கொண்ட நான்கு மண்டலங்களாக, மண்டலம் ஒன்றுக்கு 15 வார்டுகளாக செயல்பட்டு வருகிறது.
  • கணினி வரி வசூல் மையங்களில் பணமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தலாம்.

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகள் கொண்ட நான்கு மண்டலங்களாக, மண்டலம் ஒன்றுக்கு 15 வார்டுகளாக செயல்பட்டு வருகிறது. 4 மண்டலங்களிலும் கீழ்கண்டவாறு சொத்துவரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாள சாக்கடை கட்டணம், திடக்கழிவு மேலாண்மை கட்டணம், மற்றும் குத்தகை இனங்கள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வார நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மைய அலுவலக கணிணி வரி வசூல் மையம், நான்கு மண்டல அலுவலகங்கள், குமரன் வணிக வளாகம், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், ஆகிய கணினி வரி வசூல் மையங்களில் பணமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தலாம்.

மேலும் எளிய முறையில் இணையதளம் வழியாக வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தலாம். இணையதள முகவரி Use Quick Payment" or Register & Login" to. https://tnurbanepay.tn.gov.in.

இவற்றில் சொத்துவரி இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.92.16 கோடியும், காலியிட வரி இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.7.82 கோடியும், தொழில் வரி இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.2.32 கோடியும், குடிநீர் கட்டண இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.18.44 கோடியும். குத்தகை இனத்தில் 2022-23ம் ஆண்டுக்குநிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.8 கோடியும் திடக்கழிவு மேலாண்மை கட்டண இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.5.14 கோடியும், பாதாள சாக்கடை கட்டண இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.1.75 கோடியும் வசூல் நிலுவையாக உள்ளது.

திடக்கழிவு மேலாண்மை கட்டண இனத்தில் வரி திருத்தம் செய்யப்பட்டு கேட்புகள் சரி செய்யப்பட்டு வருவதால் நிலுவை தொகையை செலுத்தவும்.மேலும் 17.11.2022 அன்று அனைத்து மண்டலங்களிலும் நடக்கவிருக்கும் சிறப்பு முகாம்களில் சொத்துவரி மற்றும் காலியிடவரி வரி விதித்தல் தொடர்பிலும், பெயர் மாறுதல்கள் செய்தல் தொடர்பிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உரிய காலகெடுவிற்குள் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News