உள்ளூர் செய்திகள்
வெள்ளம் பாதித்த பகுதிகளை மடத்துக்குளம் எம்.எல்.ஏ., ஆய்வு செய்த காட்சி.
ராஜாவூர் பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மடத்துக்குளம் எம்.எல்.ஏ., ஆய்வு
- மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.
- உடுமலையிலிருந்து பழனி செல்லும் வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்லவும் ஏற்பாடு செய்தார்.
உடுமலை:
உடுமலை - பழனி நெடுஞ்சாலையில் ராஜாவூர் பிரிவுஅருகே சாலையில் மழை நீர் அதிக அளவில் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதையறிந்த மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் மழை நீரை அகற்ற அதிகாரிகளை நேரடியாக வரவழைத்து, அங்கே காத்திருந்து மழைநீரை வெளியேற்றும் பணியை பார்வையிட்டார் .மேலும் உடுமலையிலிருந்து பழனி செல்லும் வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்லவும் ஏற்பாடு செய்தார்.