உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

13 வட்டங்களில் பள்ளி மாணவா்களுக்கான சதுரங்க போட்டி - நாளை நடக்கிறது

Published On 2022-07-19 09:51 IST   |   Update On 2022-07-19 09:51:00 IST
  • விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சதுரங்கப் போட்டிகளை நடத்த அரசு உத்தரவிட்டிருந்தது.
  • உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை பாா்வையிட அழைத்து செல்லப்படவுள்ளனா்.

திருப்பூர்:

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 27 ந்தேதி முதல் ஆகஸ்ட் 10ந்தேதி வரையில் 44 -வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி தொடா்பாக பள்ளி மாணவா்களுக்கு இடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சதுரங்கப் போட்டிகளை நடத்த அரசு உத்தரவிட்டிருந்தது.

இதன்படி திருப்பூா் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயா்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி என 4 பிரிவுகளில் மாணவா்களுக்கான சதுரங்கப் போட்டிகள் ஜூலை 14 ந் தேதி நடைபெற்றது. இதில் வெற்றிப் பெற்றவா்களுக்கு வட்டார அளவிலான போட்டிகள் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (திருப்பூா்), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி (அவிநாசி), அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (ஊத்துக்குளி), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி (பல்லடம்), கொடுவாய் அரசு மேல்நிலைப் பள்ளி (பொங்கலூர்), மடத்துக்குளம், குடிமங்கலம், காங்கயம், தாராபுரம், குண்டடம், மூலனூர் அரசு மேல்நிலைப் பள்ளிகள், வெள்ளகோவில் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 13 இடங்களில் நாளை 20-ந்தேதி நடைபெறுகிறது.

இதில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் திருப்பூா் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 25 ந்தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் நபா்கள் மாமல்லபுரத்தில் நடைபெறும் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை பாா்வையிட அழைத்து செல்லப்படவுள்ளனா்.

Tags:    

Similar News