உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த 564 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

Published On 2022-11-01 03:22 GMT   |   Update On 2022-11-01 03:22 GMT
  • திருப்பூரில் பல்வேறு இடங்கள் மற்றும் இருசக்கர வாகன நிறுத்துமிடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
  • கேட்பாரற்று இருக்கும் மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றி அதன் மீது வழக்குப்பதிவு செய்ய திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டார்.

 திருப்பூர்:

திருப்பூர் மாநகரத்தில் நீண்ட நாட்களாக உரிமை கோரப்படாமல் கேட்பாரற்று இருக்கும் மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றி அதன் மீது வழக்குப்பதிவு செய்ய திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டார். அதன் பேரில் திருப்பூரில் பல்வேறு இடங்கள் மற்றும் இருசக்கர வாகன நிறுத்துமிடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

தீவிர சோதனை மேற்கொண்டதில் திருப்பூர் மாநகர வடக்கு போலீஸ் நிலைய சரகத்தில் 68 மோட்டார் சைக்கிள்களும், அனுப்பர்பாளையம் போலீஸ் நிலைய சரகத்தில் 30 மோட்டார்சைக்கிள்களும், திருமுருகன்பூண்டி போலீஸ் நிலைய சரகத்தில் 60 மோட்டார்சைக்கிள்களும், தெற்கு காவல் நிலைய சரகத்தில் 294 மோட்டார்சைக்கிள்களும், மத்திய போலீஸ் நிலைய சரகத்தில் 12 மோட்டார் சைக்கிள்களும், நல்லூர் போலீஸ் நிலைய சரகத்தில் 37 மோட்டார்சைக்கிள்களும் வீரபாண்டி போலீஸ் நிலைய சரகத்தில் 57 மோட்டார்சைக்கிள்களும் என மொத்தம் 564 மோட்டார்சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Tags:    

Similar News