உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு வழங்குவதில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும் - தொ.மு.ச. வலியுறுத்தல்

Published On 2023-01-19 06:56 GMT   |   Update On 2023-01-19 06:57 GMT
  • இக்கூட்டத்துக்கு மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் (பொறுப்பு) ராஜகுமாரி தலைமை வகித்தாா்.
  • ஒவ்வொரு மின்சார வாரிய அலுவலகத்திலும் ஏதேனும் காரணங்களை கூறி முரண்பாடாக நடந்து கொள்கின்றனா்.

திருப்பூர்:

திருப்பூா் கோட்ட அளவிலான மாதாந்திர மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் குமாா் நகா் மின்சார வாரிய துணை மின்நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் (பொறுப்பு) ராஜகுமாரி தலைமை வகித்தாா்.

இதில் மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-

திருப்பூா் மாநகரில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்கள் உள்ளிட்ட கடைகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக வணிகப் பயன்பாட்டுக்கான மின் இணைப்பு வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனா். திருப்பூா் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு மின்சார வாரிய அலுவலகத்திலும் ஏதேனும் காரணங்களை கூறி முரண்பாடாக நடந்து கொள்கின்றனா்.

இதுதொடா்பாக பலமுறை புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சிறு, குறு தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, மின் இணைப்புக்காக விண்ணப்பித்துள்ள தொழில் நிறுவனங்களுக்கு தாமதமின்றி விரைவாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News