கோப்புபடம்.
தூய்மை பணியாளர்கள் பிரசார பயணம்
- கொரோனா ஊக்கத்தொகையாக 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
- கோரிக்கையை அரசாணையாக வெளியிடக்கோரி, போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
ஊராட்சி குடிநீர் ஆபரேட்டர், தூய்மை பணியாளர் மற்றும் தூய்மை காவலருக்கான கோரிக்கைகளுக்கு அரசாணை வெளியிடக்கோரி பிரசார பயணம் துவங்கியுள்ளது.
கொரோனா ஊக்கத்தொகையாக 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். குடிநீர் ஆப்ரேட்டர்,தூய்மை பணியாளர் காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டும். ஆபரேட்டர் அனைவருக்கும் 7,040 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்.1972 பணிக்கொடை பட்டுவாடா சட்டப்படி ஆபரேட்டர்களுக்கு பணிக்கொடையும், ஓய்வூதியமும் வழங்க வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் அனைவருக்கும் வழங்கி, அதுதொடர்பான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். தாமதமின்றி சம்பள உயர்வு மற்றும் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்க வேண்டும். வாரிசு வேலை மற்றும் குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் வாரியாக பிரசார பயணம் துவங்கியுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு கிராம மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள்,தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
ஊராட்சிகளில் எவ்வித பணி பாதுகாப்பும் இல்லாமல் பணியாற்றி வரும் குடிநீர் ஆபரேட்டர்களுக்கும், தூய்மை பணியாளர், தூய்மை காவலருக்கான கோரிக்கையை அரசாணையாக வெளியிடக்கோரி, போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.கோரிக்கையை விளக்கியும், கோரிக்கைக்கு அரசாணை வெளியிட வலியுறுத்தியும் மாவட்டம் வாரியாக பிரசார பயணம் துவங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் பிரசார பயணம் நடந்துள்ளது.