உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

தூய்மை விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

Published On 2023-11-13 09:57 GMT   |   Update On 2023-11-13 09:57 GMT
  • தூய்மை தீபாவளி பசுமை தீபாவளி கையெழுத்து இயக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் துவக்கி வைத்தார்.
  • மாநகர பொறியாளர் செல்வநாயகம், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்:

திருப்பூர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம் மற்றும் எஸ்.ஆர். நகர் பகுதியில் தூய்மை தீபாவளி பசுமை தீபாவளி கையெழுத்து இயக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் துவக்கி வைத்தார்.

மேலும் "தூய்மை தீபாவளி பசுமை தீபாவளி" தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்க மாட்டோம், பொருட்கள் வாங்க செல்லும் பொழுது தடைசெய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிகளை பயன்படுத்த மாட்டேன் நம் நகரின் தூய்மை மற்றும் பசுமையை மேம்படுத்த நான் ஒத்துழைப்பேன். தூய்மை உறுதிமொழி எனது குப்பை எனது பொறுப்பு, என் நகரம் என் பெருமை. எனது நகரத்தை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பது எனது கடமையும் பொறுப்புமாகும், தூய்மைப்பணிகளுக்கு என்னைஅர்ப்பணித்து கொள்ள, என் நேரத்தை ஒதுக்குவேன். நான் பொது இடங்களில் குப்பை கொட்டமாட்டேன், பிறரையும் குப்பை கொட்ட அனுமதிக்கமாட்டேன். குப்பையை வீட்டிலேயே பிரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுப்பேன், தூய்மை நகருக்கான எனது ஆர்வத்தில், என்னை சார்ந்தவர்களும் குறைந்தபட்சம் தினசரி 2 மணி நேரம் பங்கேற்க ஊக்குவிப்பேன்.நகர தூய்மைக்கு பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருப்பதே ஒரே காரணம் என்பதை நான் நம்புகிறேன், என்னால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் எனது நகரத்தை தூய்மையாக வைக்க பேருதவி செய்யும் என நான் உறுதியாக நம்புகிறேன் என்ற தூய்மை உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் 3-வது மண்டல தலைவர் கோவிந்தசாமி, துணை மேயர் பாலசுப்ரமணியம், மாநகர நல அலுவலர் கௌரி சரவணன், உதவி ஆணையாளர் (மண்டலம்) வினோத், துணை மாநகர பொறியாளர் செல்வநாயகம், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News