உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

முத்தூர் ஒழுங்குமுறை கூடத்தில் ரூ. 1.64 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

Published On 2023-11-05 11:25 GMT   |   Update On 2023-11-05 11:25 GMT
  • மொத்தம் 2245 கிலோ கொப்பரை ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது. 46 விவசாயிகள் பங்கேற்றனர்.
  • ஏலத்தில் முதல் தரம் ஒரு கிலோ 27.45 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ 22.85 ரூபாய்க்கும், சராசரி 26.55 ரூபாய்க்கும் ஏலம் போனது.

முத்தூர்:

முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெறும். அதன்படி நடந்த கொப்பரை ஏலத்தில் 2245 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. அவை அதிகபட்சமாக ஒரு கிலோ 85.45 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக ரூ.60.15 க்கும், சராசரியாக ரூ.82.15-க்கும் ஏலம் போனது. மொத்தம் 2245 கிலோ கொப்பரை ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது. 46 விவசாயிகள் பங்கேற்றனர்.

முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் டெண்டர் முறையில் தேங்காய் ஏலம் நடைபெறுகிறது. முத்தூர் சுற்று வட்டார விவசாயிகள் 32 பேர் நேற்று விற்பனை கூடத்திற்கு 7579 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் முதல் தரம் ஒரு கிலோ 27.45 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ 22.85 ரூபாய்க்கும், சராசரி 26.55 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.83 ஆயிரத்துக்கு ஏலம் போனது என விற்பனைகூட மேற்பார்வையாளர் தங்கவேல் தெரிவித்தார்.

Tags:    

Similar News