உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

Published On 2022-11-21 04:00 GMT   |   Update On 2022-11-21 04:00 GMT
  • காங்கயம் களிமேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
  • காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளா் விஜயகுமாரி தலைமை வகித்தாா்.

திருப்பூர்:

திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு பள்ளி மாணவிகள் அழைத்துவரப்பட்டு பாலியல் வன்கொடுமை தொடா்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மேலும், குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமைகள் ஏதேனும் நிகழ்ந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிப்பதுடன், இலவச தொலைபேசி எண் 1098 தொடா்பான விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டது.

காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளா் விஜயகுமாரி தலைமை வகித்தாா்.இந்நிகழ்ச்சியில், பள்ளிக் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், 1098 என்னும் சைல்டு லைன் எண்ணின் பயன்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.இதில், காங்கயம் களிமேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Tags:    

Similar News