திருப்பூர் வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர் சுவாமி.
குருபெயர்ச்சி விழா - திருப்பூர் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்
- திருப்பூர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
- அதிகாலை 2 மணி வரை பக்தர்களுக்காக கோவில்களின் நடை திறந்திருந்தன.
திருப்பூர்:
மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்தார்.இதனையொட்டி திருப்பூர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. குரு பெயர்ச்சி அடையும் நேரம் வரை குருபகவானுக்கு எள்எண்ணெய், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம்,மஞ்சள்,பன்னீர், தண்ணீர் ஆகிய பொருட்கள் கொண்டு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இரவு 11.21 மணிக்கு குரு பெயர்ச்சி அடைந்த பிறகு வண்ண வண்ண மலர்களாலும் , ஆபரணங்களாலும் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. திருப்பூர் வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர் கோவிலில் பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் குருபகவானை வழிபட்டனர். அதன் பின் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதிகாலை 2 மணி வரை பக்தர்களுக்காக கோவில்களின் நடை திறந்திருந்தன.