உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி - கலெக்டர் அதிரடி உத்தரவு

Published On 2023-03-20 05:22 GMT   |   Update On 2023-03-20 05:22 GMT
  • ஜனவரி மாதத்தில் இருந்து மாவட்ட தலைநகரிலேயே புதிய ரேஷன் கார்டு அச்சிடும் வசதி செய்யப்பட்டுள்ளது.
  • புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிட்டு வழங்கும் பணி நடந்து வருகிறது.

திருப்பூர் :

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மாவட்ட தலைநகரிலேயே புதிய ரேஷன் கார்டு அச்சிடும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி நிலுவையில் இருந்த விண்ணப்பங்களை பரிசீலித்து கலெக்டர் ஒப்புதலுடன் புதிய ரேஷன் கார்டு அச்சிடும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த இரண்டு வாரமாக பிப்ரவரி மாதம் வரை நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் அச்சிட்டு தாலுகா அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலர்கள் கூறியதாவது:- 4 மாதம் நிலுவையில் இருந்த விண்ணப்பங்களை பரிசீலித்து புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிட்டு வழங்கும் பணி நடந்து வருகிறது. காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க மாவட்டத்திலேயே கார்டு அச்சிடும் வசதி செய்யப்பட்டு ள்ளது.விண்ணப்பங்களை பரிசீலித்து ஒவ்வொரு மாதமும் 15 நாட்கள் இடைவெளியில் நிர்வாக ஒப்புதல் பெற்று புதிய கார்டுகளை அச்சிட்டு வழங்க வேண்டுமென கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நிலுவை விண்ணப்பம் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் துவங்கி உடனுக்குடன் கார்டு அச்சிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

திருமணமாகி ஒரே குடும்பமாக வசிப்பவர்கள், தனியாக ரேஷன் கார்டு பெறக்கூடாது. பழைய கார்டில் பெயர் மட்டும் சேர்த்துக்கொள்ளலாம். கூட்டுக்குடும்பமாக வசிப்பவர் கார்டு பெறுவதை தடுக்கவே புதிய கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் போது கட்டாயம் கியாஸ் இணைப்பு வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். பலகட்ட சரிபார்ப்புக்கு பிறகே பயனாளிகளாக தேர்வு செய்து கலெக்டர் ஒப்புதலுடன் கார்டு அச்சிட்டு வழங்குவதாக குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News