விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றக் காட்சி.
பல்லடம் அருகே காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்
- பாலியல் தொந்தரவு, குழந்தை திருமணம் மற்றும் குற்ற சம்பவங்கள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
- பெண்களுக்கான குற்ற சம்பவங்களின் போது தொடர்பு கொள்ள வேண்டிய காவல்துறை தொலைபேசி எண்கள் குறித்து பேசினர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையத்தில் பல்லடம் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு போதை தடுப்பு, போதையினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு, கஞ்சா இல்லாத கிராமம், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு, குழந்தை திருமணம் மற்றும் குற்ற சம்பவங்கள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் பல்லடம் சிறப்பு துணை காவல் ஆய்வாளர்கள் பத்மநாபன், சண்முகம் ஆகியோர் பொதுமக்களிடம் போதையினால் ஏற்படும் தீமைகள், அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள், போதைப் பொருட்கள் விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் அளிப்பது, பெண்களுக்கான குற்ற சம்பவங்களின் போது தொடர்பு கொள்ள வேண்டிய காவல்துறை தொலைபேசி எண்கள் போன்றவை குறித்து பொது மக்களிடம் விளக்கி பேசினர். இந்த நிகழ்ச்சியில் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிமன்ற உறுப்பினர் முத்துக்குமார்,காவலர் சுரேந்திரன் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.