உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒருவருக்கு விபத்து இழப்பீடாக ரூ.50 லட்சத்திற்கான காசோலையை நீதிபதிகள் வழங்கிய காட்சி. தாராபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.

திருப்பூர்-தாராபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்

Published On 2022-08-13 11:24 GMT   |   Update On 2022-08-13 11:24 GMT
  • 2019ம் ஆண்டு விபத்தில் காலில் முறிவு ஏற்பட்டபவருக்கு இழப்பீடாக ரூ.50ஆயிரம் பெற்று கொடுக்கப்பட்டது.
  • பல்வேறு வழக்குகள் குறித்து விசாரணை நடத்தினர்.

தாராபுரம் :

திருப்பூரில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன், குடும்ப நல நீதிபதி சுகந்தி, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் நீதிபதி ஸ்ரீ குமார், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் மேகலா மைதிலி மற்றும் வழக்கறிஞர்கள் பாலகுமார், பழனிசாமி, ராஜேந்திரன், பாலாஜி கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தாராபுரத்தில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. சார்பு நீதிபதிகள் நீதிபதி தர்மபிரபு மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கே. எஸ். பாபு , முனிசிப் மதிவதனி, ஓய்வு பெற்ற நீதிபதி நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு வழக்குகள் குறித்து விசாரணை நடத்தினர். இதில் 2019ம் ஆண்டு விபத்தில் காலில் முறிவு ஏற்பட்ட தென்தாரை பகுதியை சேர்ந்த கணேஷ் (வயது 24) என்பவருக்கு இழப்பீடாக ரூ.50ஆயிரம் பெற்று கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வக்கீல் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News