உள்ளூர் செய்திகள்

நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கவந்த காட்சி.

நஞ்சராயன்குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் மனு

Published On 2022-07-11 16:01 IST   |   Update On 2022-07-11 16:01:00 IST
  • ஊழலில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் , முன்னாள் வருவாய்துறை செயலாளர் ஆகியோரிடம் விசாரிக்க லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறைக்கு பரிந்துரைக்க வேண்டும் .
  • நில விற்பனையை ரத்து செய்து நீர்நிலை புறம்போக்கு வகைப்பாடு செய்ய வேண்டும்.

திருப்பூர் :

திருப்பூர் நஞ்சராயன் குளக்கரையில் நீர்வழி பாதையில் உள்ள 50 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை ஒன்றரை கோடி ரூபாய்க்கு தனியார் பள்ளியை நடத்திவரும் டிரஸ்டிற்கு விற்பனை செய்ததில் நடைபெற்ற ஊழலில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் , முன்னாள் வருவாய்துறை செயலாளர் ஆகியோரிடம் விசாரிக்க லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறைக்கு பரிந்துரைக்க வேண்டும் .

நில விற்பனையை ரத்து செய்து நீர்நிலை புறம்போக்கு வகைப்பாடு செய்து நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்திற்கு பயன்படுத்த வலியுறுத்தி நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு கொடுத்தனர். 

Tags:    

Similar News