உள்ளூர் செய்திகள்

ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியபோது எடுத்த படம்.

காங்கயம் நகராட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

Published On 2022-09-30 11:09 GMT   |   Update On 2022-09-30 11:09 GMT
  • கோரிக்கை மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும்.
  • தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார்.

காங்கயம் :

காங்கயம் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் காங்கயம், பழையகோட்டை சாலையில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது. தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

திருப்பூர் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.காங்கயம் நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு கோரிக்கை மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

கூட்டத்தில் தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன், நகராட்சி நிர்வாகத்துறை செயற்பொறியாளர் பாலச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சார்லஸ் கென்னடி, காங்கயம் நகர்மன்ற தலைவர் சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையாளர் வெங்கடேஷ்வரன், காங்கயம் தி.மு.க. நகர செயலாளர் வசந்தம் நா.சேமலையப்பன், தி.மு.க. கவுன்சிலர் மணிவண்ண்ன் , தி.மு.க. நகர துணை செயலாளர் சுப்பிரமணியம் மற்றும் துறை சார்ந்த அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News