உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ஜெயலலிதா ஆட்சி அமைய எடப்பாடி பழனிசாமி வழியில் சபதமேற்போம்

Published On 2023-05-12 17:20 IST   |   Update On 2023-05-12 17:20:00 IST
  • கொரோனா தடுப்பூசியை இலவசமாக தமிழ்நாட்டில் வழங்கப்படும் அறிவித்து செயல்படுத்தினார்.
  • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கான ஆட்சியை செய்தார்.

திருப்பூர் :

திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான குணசேகரன் கூறியதாவது:- 1½ கோடி தொண்டர்களுடன் இருந்த அ.தி.மு.க.வை பட்டி தொட்டியெங்கும் அம்மாவின் பெயரை காப்பாற்றும் வகையில், நாட்டு மக்களுக்கு எந்தவித வரி ஏற்றமும் இல்லாமல் மக்களுக்கு அம்மா வழங்கிய திட்டங்களான தாலிக்கு தங்கம், மடிக்கணினி, அம்மா மினி கிளினீக், அம்மா குடிநீர், உழைக்கும் மகளிருக்கு இருச்சக்கர வாகனம் உள்பட கருவறை முதல் கல்லறை வரை வழங்கிய திட்டங்களை எல்லாம் கொஞ்சம் கூட குறையாமல் புதிய சரித்திரம் படைத்து முன்னாள் முதல்-அமைச்சர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கான ஆட்சியை செய்தார்.

கொரோனா காலத்தில் ரேஷன் கடைகளில் உணவு பொருட்களை வழங்கி, கொரோனா தடுப்பூசியை இலவசமாக தமிழ்நாட்டில் வழங்கப்படும் அறிவித்து செயல்படுத்தினார். திருப்பூருக்கு 4-வது குடிநீர் திட்டம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டிடங்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பழைய பஸ் நிலையம், மார்க்கெட், நொய்யல் சீரமைப்பு உள்ளிட்ட அரிய திட்டங்களை தந்தும், ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்த மருத்துவ படிப்பை அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்து ஏழை மக்களின் துயர் தீர்த்த புரட்சி தமிழ் மகன் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழி நடப்போம். அம்மா ஆட்சி அமைய எடப்பாடி பழனிசாமி வழியில் சபதமேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News