உள்ளூர் செய்திகள்

பல்லடம் பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாகும் கேரள மாநில லாட்டரி சீட்டுகள்.

சமூக வலைத்தளங்கள் மூலம் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனையா ?

Published On 2023-05-20 05:42 GMT   |   Update On 2023-05-20 05:42 GMT
  • சமூக வலைத்தளங்களில் கேரள மாநில லாட்டரிகளின் படங்கள் வெளியாகி உள்ளது.
  • போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும்

பல்லடம் :

தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு அரசு தடை விதித்து உள்ளது. இருந்த போதிலும் மறைமுகமாக நம்பர் எழுதியும், சமூக வலைதளங்கள் மூலம் நம்பர்கள் குறிப்பிட்டும் முறைகேடான லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், பல்லடம் பகுதியில் சமூக வலைதளம் மூலம் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:- பல்லடம் பகுதி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். தமிழ்நாடு அரசால் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்ட நிலையில், கேரள மாநில லாட்டரிகள் சமூக வலைதளங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கேரள மாநில லாட்டரிகளின் படங்கள் வெளியாகி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் லாட்டரி சீட்டுகள் படங்கள் வெளியாகியும், உளவுத்துறை போலீசாரின் கண்காணிப்பு இல்லாததால், அவர்களின் ஆதரவோடு இந்த லாட்டரி விற்பனை நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News