உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் காமராஜர் மக்கள் மன்ற தலைவர் அன்னை எம்.மாதவன் பேசிய காட்சி. அருகில் நிர்வாகிகள் உள்ளனர்.  

காமராஜர் மக்கள் மன்றம் சார்பில் காமராஜரின் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட முடிவு

Published On 2023-05-27 10:29 GMT   |   Update On 2023-05-27 10:29 GMT
  • காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
  • பகுதி வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்வது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

திருப்பூர் :

காமராஜர் மக்கள் மன்றம் சார்பில் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைவர் அன்னை எம்.மாதவன் தலைமையில், தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஜூலை 15-ந்தேதி காமராஜர் பிறந்த நாள் விழாவில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, விளையாட்டுப்போட்டி நடத்துதல். ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல், மாபெரும் அன்னதானம் வழங்குவது,திருப்பூர் மாவட்டம் முழுவதும் பகுதி வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்வது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் செயலாளர் அலெக்ஸ், பொருளாளர் பழனியப்பன், துணை தலைவர் பிரான்ஸிஸ், துணை செயலாளர் அந்தோணி, இணைசெயலாளர்கள் டி.எம். சுருளிராஜ், ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக ரமேஷ்குமார், ஜெயக்குமார், சூர்யா,பரமசிவன், ரத்னா மனோகர், ஈஸ்வரன்,நெல்லை ராஜன், சின்னமணி, சரவணன், மகிஷா , மைக்கேல், ஆத்திசெல்வன், கண்ணன், லாலாகணேசன்,யோகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

Tags:    

Similar News