உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த மாணவனை பள்ளி பொருளாளர், முதல்வர், பள்ளியின் தாளாளர், அகடமிக் டைரக்டர் ஆகியோர் பாராட்டி பரிசளித்த காட்சி.

மாநில அளவிலான தடகள போட்டி ஜேஸீஸ் பள்ளி மாணவன் தேர்வு பெற்று சாதனை

Published On 2022-11-20 11:18 IST   |   Update On 2022-11-20 11:18:00 IST
  • வட்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
  • திருவண்ணாமலையில் நடைபெறஉள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

காங்கயம் :

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவிலான தடகள போட்டி திருப்பூர் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் பங்குபெற்ற காங்கயம் சிவன்மலை ஜேஸீஸ் பள்ளி 9-ம் வகுப்பு மாணவன் லிங்கேஷ் 14 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் வட்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் இம்மாத இறுதியில் திருவண்ணாமலையில் நடைபெறஉள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவனை பள்ளி பொருளாளர் பழனிச்சாமி, மோகனசுந்தரம், சாவித்திரிசுப்ரமணியம், முதல்வர் சுப்ரமணி,பள்ளியின் தாளாளர்,அகடமிக் டைரக்டர்ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.

Tags:    

Similar News