உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு தேங்காய் வரத்து அதிகரிப்பு

Published On 2023-03-20 04:54 GMT   |   Update On 2023-03-20 04:54 GMT
  • 4 ஆயிரத்து 274 தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
  • ஒரு கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.25.25-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.21.25-க்கும் ஏலம் விடப்பட்டது.

காங்கயம் :

முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருள்களின் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலங்களில் முத்தூர் நகர மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி விவசாயிகள், ஈரோடு மாவட்டம் கொல்லன்கோவில், சிவகிரி பேரூராட்சி பகுதிகள், அஞ்சூர் ஊராட்சி, கரூர் மாவட்டம் அஞ்சூர், கார்வழி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வேளாண் விளை பொருட்களை விற்று பலன் அடைந்து வருகின்றனர்.

இதன்படி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 4 ஆயிரத்து 274 தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இவை டெண்டர் முறையில் ஏலம் நடைபெற்றது. இதில் ஒரு கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.25.25-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.21.25-க்கும் ஏலம் விடப்பட்டது.

மேலும் 47 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ.81.10-க்கும், குறைந்தபட்சமாக என ரூ.57.25-க்கும் ஏலம் போனது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 1,105 தேங்காய்களும், 13 தேங்காய் பருப்பு மூட்டைகளும் கூடுதலாக கொண்டு வரப்பட்டிருந்தது.

தேங்காய், தேங்காய் பருப்பு 3¼ டன் அளவில் மொத்தம் ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 272-க்கு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலங்களில் திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். இத்தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் கே.தங்கவேல் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News