உள்ளூர் செய்திகள்

அமைச்சர்.மு.பெ. சாமிநாதன் காவல் நிலையத்தில் குத்துவிளக்கினை ஏற்றிய காட்சி.  

திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையம் திறப்பு - காணொளி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Published On 2022-12-30 13:40 IST   |   Update On 2022-12-30 13:40:00 IST
  • ரூ.1கோடியே 30 லட்சம் மதிப்பில் புதிதாக காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது.
  • அமைச்சர்.மு.பெ.சாமிநாதன் காவல் நிலையத்தில் குத்துவிளக்கினை ஏற்றினார்.

 திருப்பூர் :

திருப்பூர் மாநகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருமுருகன் பூண்டி,ராக்கியாபாளையம் பகுதியில் தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ரூ.1கோடியே 30 லட்சம் மதிப்பில் புதிதாக காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இந்த புதிய காவல் நிலையத்தினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். திருமுருகன்பூண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்.மு.பெ. சாமிநாதன் காவல் நிலையத்தில் குத்துவிளக்கினை ஏற்றினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார்,மாநகர காவல் ஆணையர் பிரபாகரன்,மாநகர துணை காவல் ஆணையர்கள் அபினவ் குமார்,வனிதா மற்றும் காவல் துறை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News