உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்
வெள்ளகோவிலில் லாட்டரி சீட்டு விற்ற 3பேர் கைது
- ஈரோடு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் விஜயகுமார் என்பவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- முருகேசன் என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த திண்டுக்கல் மாவட்டம் ராஜகாபட்டியை சேர்ந்த முருகேசன் என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் வெள்ளகோவில் பழைய பஸ் நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த சபாபதி மகன் சிவசண்முகம் என்பவரையும். புதிய பஸ் நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஈரோடு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் விஜயகுமார் என்பவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.