உள்ளூர் செய்திகள்

பராமரிப்பின்றி கிடக்கும் பறிமுதல் வாகனங்களை படத்தில் காணலாம்

உடுமலையில் பராமரிப்பின்றி கிடக்கும் பறிமுதல் வாகனங்கள்

Published On 2022-09-23 10:31 GMT   |   Update On 2022-09-23 10:31 GMT
  • உடுமலை குட்டைத்திடலில் தனியார் வீட்டுமனை அமைந்துள்ள பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன
  • பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனங்கள் வீணாகி வருகிறது

உடுமலை :

உடுமலை போலீஸ் சார்பில் மது போதை, விபத்து, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களை போலீசார் பறிமுதல் வைத்துள்ளனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை பாதுகாப்பாக வைத்து பராமரிக்க வேண்டும். வழக்கு முடிந்ததும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும். வழக்கு முடிந்தது மற்றும் உரிமை கோரப்படாத வாகனங்களை, உரிய உத்தரவு அடிப்படையில், பொது ஏலம் விட வேண்டும் .

இந்தநிலையில் உடுமலை குட்டைத்திடலில் மேம்பாலத்தின் கீழ், தனியார் வீட்டுமனை அமைந்துள்ள பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான மோட்டார்சைக்கிள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பு இல்லாமலும், வெயிலிலும், மழையிலும் நனைந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனங்கள் வீணாகி வருகிறது. புதர் மண்டியும், பழைய இரும்புக்குக்கூட பயன்படாத அளவிற்கு வீணாகின்றன. எனவே நீதிமன்ற வழக்கில் தொடர்புடைய வாகனங்களை உரிய முறையில் பாதுகாக்கவும், உரிமை கோரப்படாத வாகனங்களை, வழிமுறைகள் அடிப்படையில் ஏலம் விட்டு, அரசுக்கு நிதி வருவாயை ஏற்படுத்தவும், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News