கோப்புபடம்
உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்காவிட்டால் தி.மு.க., அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம்
- உதயநிதி ஸ்டாலின் உருவபொம்மையை எரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
- சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்யவேண்டிய முதல் பணி.
திருப்பூர்:
சிவசேனா கட்சியின் இளைஞரணி தலைவர் திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சனாதன ஒழிப்பு மாநாட்டில் தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக்கூடாது ஒழித்துக்கட்டவேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்யவேண்டிய முதல் பணி என்றார். இது சர்ச்சைக்குள்ளாகியது. பல்வேறு அமைப்புகளும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சிவசேனா மாநில அமைப்பாளர் பாலாஜி, உதயநிதி ஸ்டாலின் உருவபொம்மையை எரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதை பொறுத்துக்கொள்ள முடியாத காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் சிவசேனா மாநில அமைப்பாளர் பாலாஜியை கைது செய்து நடவடிக்கை எடுத்திருப்பது தி.மு.க.வினரின் கையாளாகதனத்தை காட்டுகிறது.
உடனடியாக தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லை எனில் தமிழக சிவசேனா கட்சி சார்பில் மாநிலம் தழுவிய கடுமையான போராட்டம் நடத்தப்படும் .மாவட்ட தலைநகரங்களில் உள்ள தி.மு.க., அலுவலகங்களை முற்றுகையிட்டு பேராட்டம் நடத்தப்படும் .இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.