உள்ளூர் செய்திகள்

பயிற்சிக்கு வந்தவர்களுக்கு பயிற்சிக்கான கையேடுகளும் வழங்கப்பட்ட காட்சி.

வெள்ளகோவிலில் ஜவுளித்துறை சார்பில் கைத்தறி நெசவு பயிற்சி

Published On 2023-06-16 10:49 GMT   |   Update On 2023-06-16 10:49 GMT
  • பயிற்சியானது 45 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது.
  • தினசரி ரூ.300 வீதம் ஊக்கத்தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளன.

வெள்ளகோவில் :

வெள்ளகோவிலில் இந்திய அரசின் ஜவுளித்துறை மற்றும் சேலம் நெசவாளர் சேவை மையம், இணைந்து கைத்தறி நெசவு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியானது ஆகஸ்ட் மாதம் 8 ந்தேதி வரை 45 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியை நெசவாளர் சேவை மைய உதவி இயக்குனர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார். பயிற்சிக்கு 20 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தினசரி ரூ.300 வீதம் ஊக்கத்தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளன.

நேற்று பயிற்சிக்கு வந்தவர்களுக்கு பயிற்சிக்கான கையேடுகளும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தியாகராயர் தொழிற்சங்க பொதுச் செயலாளர் கே.ஜி. நட்ராஜ் செய்திருந்தார்.

Tags:    

Similar News