உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

காய்ச்சல் தடுப்பு வழிமுறைகள் அரசு மருத்துவர்கள் விளக்கம்

Published On 2023-11-18 10:15 IST   |   Update On 2023-11-18 10:15:00 IST
  • மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
  • தண்ணீர், பாக்டீரியா, வைரஸ் உட்பட பிற காரணங்களாலும் காய்ச்சல் வரலாம்.

திருப்பூர் : 

பருவ மழை காரணமாக வரும் காய்ச்சல் தடுப்பது குறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:-

இந்த பருவ காலத்தில் காய்ச்சல் அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குழந்தைகளை பாதுகாப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர், பாக்டீரியா, வைரஸ் உட்பட பிற காரணங்களாலும் காய்ச்சல் வரலாம்.

முதலில் அது எந்த வகை காய்ச்சல் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சாதாரணமாக காய்ச்சல் என்றால் இரண்டு, மூன்று நாட்களில் சரியாகிவிடும். கிருமிகளால் காய்ச்சல் ஏதேனும் வந்தால், அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

குறிப்பாக, நான்கு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல் வந்தால் கஞ்சி, இளநீர், மோர் போன்ற நீர் ஆகாரங்களை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும். முக கவசங்கள் அணிந்து கொள்வதும் நல்லது என்றனர்.

Tags:    

Similar News