உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

அரசு பணி போட்டி தோ்வுகளுக்கு இலவச பயிற்சி

Published On 2023-05-17 16:01 IST   |   Update On 2023-05-17 16:01:00 IST
  • இந்த பயிற்சி வகுப்புகள் 100 நாள்கள் தொடா்ச்சியாக நடத்தப்படும்.
  • இந்தப் பயிற்சி வகுப்பில் 150 இளைஞா்கள் வரையில் கலந்து கொள்ளலாம்.

திருப்பூர்:

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் வங்கிப் பணி உள்ளிட்ட அரசுப் பணிக்கான போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர மே 20 -ந் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக பணியாளா் தோ்வாணையம், ெரயில்வே பணியாளா் தோ்வாணையம் மற்றும் வங்கிப் பணியாளா் தோ்வாணையம் ஆகியவற்றின் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தமிழகத்தைச் சோ்ந்த போட்டித் தோ்வாளா்கள் வெற்றி பெற உதவிடும் வகையில் மாவட்டந்தோறும் கட்டணமில்லாப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.இந்த பயிற்சி வகுப்புகள் 100 நாள்கள் தொடா்ச்சியாக நடத்தப்படும்.

பயிற்சிக்கான புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். இந்தப் பயிற்சி வகுப்பில் 150 இளைஞா்கள் வரையில் கலந்து கொள்ளலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

எனவே, திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நான் முதல்வன் திட்டத்தின் பயிற்சி மையத்தில் சேர மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான இளைஞா்கள் நேரடியாக இணையதளம் வாயிலாக மே 20 -ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 94990-55944 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News