உள்ளூர் செய்திகள்

 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கிய காட்சி.

மூலனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 269 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

Published On 2023-08-26 07:05 GMT   |   Update On 2023-08-26 07:05 GMT
  • அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா மூலனூரில் நடைபெற்றது.
  • இந்த விழாவில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டார்.

மூலனூர்:

திருப்பூர் மாவட்டம் மூலனூர் பேரூராட்சி கன்னிவாடி பேரூராட்சி,வடுகபட்டி ,புதுப்பை ,தலையூர் ,ஆகிய பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா மூலனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

மாவட்ட வருவாய்துறை அலுவலர் ஜெய் பீம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு அரசின் நலத்திட்டங்களை விளக்கி கூறி வரும் காலங்களில் மாணவ மாணவிகள் இந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளை வழங்கினார்.

அதன் பின்னர் மூலனூர் பேரூராட்சி, கன்னிவாடி பேரூராட்சி, வடுகபட்டி, புதுப்பை, புஞ்சை தலையூர் ஆகிய பகுதிகளில் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளான மொத்தம் 269 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இந்த விழாவில் மாவட்ட கல்வித்துறை அதிகாரி கீதா, மூலனூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுமதி கார்த்திக், மூலனூர் பேரூராட்சி மன்ற தலைவர் தண்டபாணி, கன்னிவாடி பேரூராட்சி மன்ற தலைவர் ரேவதி சுரேஷ் மற்றும் மூலனூர் ஒன்றிய கிழக்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி , மேற்கு ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு மற்றும் கன்னிவாடி பேரூர் செயலாளர் சுரேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாணவ மாணவிகள், பள்ளி ஆசிரிய, ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தி நன்றி கூறினார்.

Tags:    

Similar News