உள்ளூர் செய்திகள்

உண்டியல் பணத்தை எண்ணும் ஊழியர்களையும், உண்டியலில் போடப்பட்டுள்ள கேரளா லாட்டரி சீட்டையும் படத்தில் காணலாம்.

திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவில் உண்டியலில் வெளிநாட்டு பணம், கேரளா லாட்டரி காணிக்கை

Published On 2022-11-10 11:17 GMT   |   Update On 2022-11-10 11:17 GMT
  • 3 மாதங்களுக்கு ஒருமுறை உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட பணத்தை எண்ணி கருவூலத்தில் செலுத்துவது வழக்கம்.
  • 3 உண்டியல்களையும் திறந்து காணிக்கையை எண்ணும் பணியை தொடங்கினர்.

திருப்பூர் :

திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே மத்தியில் அமைந்துள்ளது வீரராகவப் பெருமாள் கோவில். இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அவர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கோவிலில் உள்ள உண்டியலில் காணிக்கையை செலுத்தி செல்கின்றனர்.

அதனை 3 மாதங்களுக்கு ஒரு இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் திறந்து உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட பணத்தை எண்ணி கருவூலத்தில் செலுத்துவது வழக்கம். அந்த வகையில் இன்று இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் 3 உண்டியல்களையும் திறந்து காணிக்கையை எண்ணும் பணியை தொடங்கினர். அப்போது உண்டியலில் வெளிநாட்டு கரன்சிகளும், கேரளா லாட்டரியும் இருந்தன. அதனை கண்டு அதிகாரிகள் வியப்பு அடைந்தனர். கண்காணிப்பு கேமரா உதவியுடன் உண்டியல் பணம் எண்ணும் பணியை இந்து அறநிலைத்துறை அதிகாரிகள், மற்றும் பணியாளர்கள், தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

Tags:    

Similar News