உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

விலை அதிகரிப்பால் தக்காளி செடி பராமரிப்பு ஆர்வம் காட்டும் விவசாயிகள்

Published On 2023-07-09 05:43 GMT   |   Update On 2023-07-09 05:43 GMT
  • காலநிலை மாறுபாட்டால் கடும் வெப்பம் நிலவியது.
  • குளிர்ச்சியான காற்று வீசுவதால் தக்காளி செடிகள் நன்கு வளர்ச்சி அடைந்து பூக்கத் துவங்கியுள்ளது.

திருப்பூர்:

கடந்த மாசி பட்டத்தில் பல விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்திருந்தனர். காலநிலை மாறுபாட்டால் கடும் வெப்பம் நிலவியது. வெப்பத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தக்காளி செடிகள் கருகின. விளைச்சல் பாதிப்பால் தக்காளி விளைச்சல் மிகவும் குறைந்து விட்டது. தட்டுப்பாடு காரணமாக கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. உச்ச விலைக்கு விற்பனையான போதிலும் போதிய விளைச்சல் கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

கடந்த வைகாசி பட்டத்தில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். குளிர்ச்சியான காற்று வீசுவதால் தக்காளி செடிகள் நன்கு வளர்ச்சி அடைந்து பூக்கத் துவங்கியுள்ளது. தக்காளி அதிக விலைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் தக்காளி செடிகளை கண்ணும் கருத்துமாக பராமரித்து வருகின்றனர்.

அடுத்த மாதத்தில் புதிய தக்காளி அறுவடை துவங்கிவிடும். எனவே சில வாரங்களில் விலை குறைய துவங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags:    

Similar News