உள்ளூர் செய்திகள்

தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்.

சுக்கம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா

Published On 2023-07-18 12:48 IST   |   Update On 2023-07-18 12:48:00 IST
  • ஊராட்சி செயலாளர் ஆவணங்களை கடிதம் அல்லது தகவல் உரிமைச் சட்டம் மூலமாகத்தான் கேட்டு பெற முடியும்.
  • பேச்சுவார்த்தை நடத்தி ஊராட்சி மன்ற தீர்மானங்களை விவசாயிகள் பார்வையிட ஏற்பாடு செய்தனர்.

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், ஊராட்சி மன்ற தீர்மான நகல்களை விவசாயிகள் சிலர் நேரில் சென்று வாய்மொழியாக கேட்டதாக கூறப்படுகிறது.இதற்கு ஊராட்சி செயலாளர் ஆவணங்களை கடிதம் அல்லது தகவல் உரிமைச் சட்டம் மூலமாகத்தான் கேட்டு பெற முடியும். வாய் மொழியாக கேட்டால் தர இயலாது என கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஊராட்சி மன்ற அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற பல்லடம் போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி ஊராட்சி மன்ற தீர்மானங்களை விவசாயிகள் பார்வையிட ஏற்பாடு செய்தனர். இதையடுத்து தீர்மான விவரங்களை பார்வையிட்ட விவசாயிகள் பின்னர் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News