உள்ளூர் செய்திகள்

கண்காட்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களை படத்தில் காணலாம்.

திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் பள்ளியில் கண்காட்சி

Published On 2023-11-19 11:23 IST   |   Update On 2023-11-19 11:23:00 IST
  • ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ‘ஷிக்்ஷா பேர்23’ கண்காட்சி நடைபெற்றது.
  • பாட வாரியாக பலவகையான ஒப்படைவுகள் காட்சிப்படுத்தப்பட்டன.

திருப்பூர் :

திருப்பூர் காந்தி நகர் ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 'ஷிக்்ஷா பேர்23' கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவர்களின் பாட வாரியாக பலவகையான ஒப்படைவுகள் காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சிக்கு வேலவன் மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர் மற்றும் அறங்காவலர் எஸ்.பிரேமா இளங்குமரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மாணவர்களின் படைப்புகள் அனைத்தும் வியக்கத்தக்க வகையில் இருந்தன.

நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஏ.கார்த்திகேயன், பொருளாளர் லதா கார்த்திகேயன், முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் ஆர்.வித்யா ரிஸ்வான், பெற்றோர்கள் கலந்துகொண்டு ஆசிரியர்களையும், மாணவர்களையும் பாராட்டினார்கள்.

Tags:    

Similar News