உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

கோவில் பாதுகாப்பு படையில் பணிபுரிய முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

Published On 2023-01-26 15:28 IST   |   Update On 2023-01-26 15:28:00 IST
  • 62 வயதுக்கு உள்பட்ட திடகாத்திரமான முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்.

திருப்பூர்:

திருப்பூா் மாவட்டத்தில் கோவில் பாதுகாப்புப் படையில் பணிபுரிய முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூரில் உள்ள கோவில்களில் விலைமதிப்பு மிக்க ஐம்பொன் சிலைகள், தங்கம், வெள்ளி ஆபரணங்கள், விலையுயா்ந்த பொருள்கள் மற்றும் உண்டியல்கள் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டி கோவில் பாதுகாப்புப் படை என்ற தனிப்படை உள்துறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மாவட்ட எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள மிக முக்கியமான கோவில்களில் பாதுகாப்புப் பணிக்கு 44 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணிக்கு 62 வயதுக்கு உள்பட்ட திடகாத்திரமான முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம். திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் கலெக்டர் அலுவலகத்தின் 5 -வது தளத்தில் உள்ள அறை எண் 523 ல் இயங்கும் மாவட்ட முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் அசல் படை விலகல் சான்று, 2 புகைப்படங்கள், அடையாள அட்டையுடன் நேரில் அணுகி விருப்ப விண்ணப்பத்தை சமா்ப்பிக்கலாம்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு முன்னாள் படை வீரா் நல அலுவலகத்தை 0421-2971127 என்ற தொலைபேசியிலோ அல்லது என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News