உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ஊக்கத்தொகைக்கான பதிவு பணி - சர்வர் பிரச்சினையால் விவசாயிகள் தவிப்பு

Published On 2022-07-26 07:47 GMT   |   Update On 2022-07-26 07:47 GMT
  • பி.எம்., கிசான் ஐ.டி.,யில் தங்களை இணைத்து வருகின்றனர்.
  • ஏராளமான விவசாயிகள் இ சேவை மையங்களுக்கு வருகின்றனர்.

உடுமலை :

ஆண்டுக்கு ரூ. 6,000 பெறும் பிரதமரின் கவுரவ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் உடுமலை, பல்லடம், தாராபுரம் என திருப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த ஏராளமான விவசாயிகள் இணைந்துள்ளனர். விவசாயி அல்லாதவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் எ போலி பயனாளிகளை கண்டறிந்து அவர்களை நீக்கும் பணியில் வேளாண் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஊக்கத்தொகை பெறும் விவசாயிகள், தங்கள் நில ஆவணங்களை அந்தந்த வட்டாரங்களில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் வழங்கி பி.எம்., கிசான் ஐ.டி.,யில் தங்களை இணைத்து வருகின்றனர்.

இதன் வாயிலாக அவர்களின் நில விபரம் 'அப்டேட்' செய்யப்படும். இதில் தங்களை இணைத்துக்கொண்டவர்களுக்கு மட்டுமே வரும் நாட்களில் கவுரவ ஊக்கத்தொகை கிடைக்கும் என்ற நிலையில், இப்பணியை இம்மாதம் இறுதிக்குள் முடிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நில ஆவணங்களை அப்டேட் செய்ய இ சேவை மற்றும் கம்ப்யூட்டர் நிலையங்கள் வாயிலாக சிட்டா நகலை விவசாயிகளை பெற வேண்டும். ஆன்லைன் வழியாகவே சிட்டா நகல் பெறப்படும் நிலையில், பல இடங்களில் சர்வர் பிரச்னையால், இதை பெற முடியாத நிலையில், விவசாயிகள் அலைமோதுகின்றனர்.கால அவகாசம் குறைவாக உள்ள நிலையில் தினமும் ஏராளமான விவசாயிகள் இ சேவை மையங்களுக்கு வருகின்றனர். தொடர் பயன்பாடால் வரும் நாட்களில் சர்வர் முடங்கும் நிலை ஏற்படும் என்பதால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News